கிரிக்கெட்
அவர் பண்ணது தப்பு.. விராட் கோலி செஞ்சுரி அடித்தும் கூட.. மோசமாக கலாய்க்கும் ரோஹித் சர்மா பேன்ஸ்

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் கோலி நேற்று செஞ்சுரி அடித்தும் கூட அவரை ரோஹித் சர்மா ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த தொடரின் கடைசி போட்டி ஆகும் இது. இந்த போட்டி பெரும்பாலும் டிரா ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கடைசி நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சியல் 160 ரன்களை கடந்து ஆடிக்கொண்டு இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி தற்போது டிரா ஆகும் சூழ்நிலையில் உள்ளது.
இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா 180 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதன்பின் இறங்கிய இந்திய அணி தற்போது 571-10 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 91 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. கோலி இதில் 364 பந்துகள் பிடித்த அவர் 15 சிக்ஸ் அடித்து 186 ரன்கள் எடுத்தார். அதேபோல் சுப்மான் கில்லும் சதம் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் கோலி நேற்று செஞ்சுரி அடித்தும் கூட அவரை ரோஹித் சர்மா ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த போட்டி டிரா ஆக இவர்தான் காரணம். பிளாட் பிட்சில் வேகமாக ஆடாமல் இவர் மெதுவாக ஆடினார். அதனால்தான் செஞ்சுரி அடித்தார். அவர் வேகமாக ஆடி இருந்தால் இந்தியா வென்று இருக்க முடியும். அவர் பழைய மாதிரி இல்லை. இந்தியாவின் வெற்றிக்கு ஆடாமல் தன்னுடைய சொந்த சாதனைக்காக அவர் ஆடி உள்ளார் என்று ரோஹித் சர்மா ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவர் இந்த போட்டியில் குறைவாக பவுண்டரிகளை அடித்தார். இதுவரை 15 பவுண்டரி மட்டுமே அடித்தார். மிக மெதுவாக ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய விதம்தான் இப்படி சர்ச்சையாகி உள்ளது.