கிரிக்கெட்
ஆஹா இந்திய அணிக்கு வந்த செம சான்ஸ்.. ஒரு தடவைதான் துண்டு தவறு.. இனி தவறக்கூடாது!

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி தற்போது டிரா ஆகும் சூழ்நிலையில் உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ,இதில் முதலில் பின்தங்கி இருந்த இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவை விட லீட் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா அதிரடியாக 180 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது .
அதன்பின் இறங்கிய இந்திய அணி தற்போது 571-10 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 91 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி நிதானமாக ஆடி சதம் அடித்தார். 364 பந்துகள் பிடித்த அவர் 15 சிக்ஸ் அடித்து 186 ரன்கள் எடுத்தார். அதேபோல் சுப்மான் கில்லும் சதம் அடித்தார்.
இப்போது கடைசி நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சியல் 160 ரன்களை கடந்து ஆடிக்கொண்டு இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி தற்போது டிரா ஆகும் சூழ்நிலையில் உள்ளது. இந்த தொடரை ஏற்கனேவே 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுவிட்டது.
இது போக இன்று நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்துவிட்டது. முதலில் ஆடிய இலங்கை 355 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 373 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய இலங்கை 302 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இரண்டாவதாக இறங்கிய நியூசிலாந்து கடைசி பந்தில் 1 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் திரில்லாக பைஸ் மூலம் ரன் எடுத்து வென்றது.
இந்த போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததால் பாயிண்ட்ஸ் அடிப்படையில் இனி இலங்கை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பைனலுக்கு வர முடியாது என்பதால் இந்திய அணி டெஸ்ட் பைனலுக்கு சென்றுள்ளது. கடந்த வருடம் நியூஸிலாந்திடம் டெஸ்ட் பைனலில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்த வருடம் ஆஸ்திரேலியாவை பைனலில் எதிர்கொள்ள உள்ளது.