கிரிக்கெட்
விராட் கோலி 6 ரன்னில் அவுட்.. ஆனாலும் வெற்றி பெற்ற டெல்லி – ரஞ்சியில் அபார திருப்பம்!

12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடிய விராட் கோலி, ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கினார். பிசிசிஐ விதிமுறைகளின்படி இந்தியாவின் மூத்த வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது கட்டாயமாக உள்ள நிலையில், கோலி டெல்லி அணிக்காக ரஞ்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில், ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில், கோலி வெறும் 6 ரன்னில் பவுல்டாகி வெளியேறினார். அவரது ஆட்டம் நீடிக்காததால், பெரும் எண்ணிக்கையில் வந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.
போட்டியின் முக்கிய தருணங்கள்:
• முதலில் பேட்டிங் செய்த ரயில்வே அணி – 241 ரன்கள்
• டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் தடுமாறியது
• விராட் கோலி 6 ரன்னில் அவுட் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி
• ஆயுஸ் பதோனி (99 ரன்கள்), சுமித் மதூர் (86 ரன்கள்) அசத்தல் ஆட்டம்
• டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் சேர்த்து முன்று
• ரயில்வே இரண்டாவது இன்னிங்ஸ் – 114 ரன்னில் சுருண்டது
• ஷிவம் சர்மா அபார பந்துவீச்சு – 5 விக்கெட்டுகள்
• டெல்லி அபார வெற்றி – ஒரு இன்னிங்ஸ் & 19 ரன்கள் வித்தியாசம்
டெல்லியின் பிரமாண்ட வெற்றி!
முதலில் விளையாடிய ரயில்வே அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணியில் விராட் கோலி 6 ரன்னில் வெளியேறினாலும், ஆயுஸ் பதோனி (99) மற்றும் சுமித் மதூர் (86) அபாரமாக விளையாடி 374 ரன்கள் குவித்தனர்.
133 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வந்த ரயில்வே அணி வெறும் 114 ரன்னில் சுருண்டது. இந்த வெற்றியில் ஷிவம் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்கு வகித்தார்.
இதன் மூலம், டெல்லி அணி ஒரு இன்னிங்ஸ் & 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி அதிகமாக ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும், டெல்லி அணி அபார கம்பேக் காட்டியது.


















