கிரிக்கெட்
ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் அதிரடி – சொந்த மண்ணில் இலங்கைக்கு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் பகீரா தோல்வி!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
இலங்கை மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய அணி, காலி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜா (232), ஸ்டீவ் ஸ்மித் (141), ஜோஸ் இங்கிலீஷ் (102) ஆகிய மூன்று வீரர்கள் சதம் அடித்து அசத்தியதால், அணி 654/6 என்ற மாபெரும் ஸ்கோரை பதிவு செய்து டிக்ளர் செய்தது.
பின்னர், ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் அதிரடியாக பந்து வீசி, இலங்கை அணியை சுருட்டியடித்தனர். எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கை அணி, சொந்த மண்ணிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















