தமிழ்நாடு
விராலிமலை எம்.எல்.ஏ விஜயபாஸ்கருக்கு கொரோனா: வீட்டிலேயே சிகிச்சை

முன்னாள் சுகாதார துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா முதல் அலையின் போதும் இரண்டாவது அலையின் போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தார் என்பது தெரிந்ததே. மேலும் பொதுமக்கள் தங்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது பேட்டி அளித்து வந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவான விஜய் பாஸ்கர் அவர்களுக்கே தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தன்னைத்தானே வீட்டில் தனிமை படுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் ஒவ்வொருவரும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அரசின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
I have been tested positive for #Covid19 today at the Public Health Lab. After my test, I have isolated myself and I request everyone who were in my contact to get tested. Kindly follow Covid guidelines and stay safe.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) May 6, 2021



















