தமிழ்நாடு
ரஜினியை அரசியலுக்கு வரக்கோரிய போராட்டம்: களத்தில் ‘போதையில் ஆடும் ரசிகர்கள்’!?

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரி, அவரது ரசிகர்கள் இன்று சென்னையில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் களத்தில் சில ரசிகர்கள், குதூகல ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் மது போதையில் இப்படி ஆட்டம் போடுவதாக தெரிகிறது. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, உடல்நல பாதிப்பு காரணமாக அரசியல் கட்சித் தொடங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ரஜினி அறிவிப்பு வெளியிட்ட அன்றைய தினமே, சில ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள், சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியில் போராட்டம் செய்தனர். அவர்களை தமிழக காவல் துறை அப்புறப்படுத்தியது. ரஜினி இல்லத்துக்கு முன்பு போராடக் கூடாது என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்படியான சூழலில் இன்று அனுமதி வாங்கி போராட்டம் செய்து வருகின்றனர் சில ரசிகர்கள்.
போதைய போட்டுட்டு ஆடுறானுவ???????? pic.twitter.com/NhVK6yYdNc
— உளவாளி (@withkaran) January 10, 2021





















