சினிமா செய்திகள்
விக்ரம், துருவ் விக்ரமின் ‘மஹான்’ படத்தின் மாஸ் டிரைலர்!
Published
12 months agoon
By
Shiva
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ‘மஹான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார் என்பதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ‘மஹான்’ அமேசானில் பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இரண்டு நிமிட டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த டிரைலரில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் மாஸ் காட்சிகளை அடுத்து அவரது ரசிகர்களுக்கு சரியான விருந்து இந்த டிரைலர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்ப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜின் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
You may like
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
காந்தாரா முதல் ஆர்ஆர்ஆர் வரை ரூ.400 கோடி வசூலித்த தென் இந்திய படங்கள்!
-
விக்ரம் படத்தையும் விட்டு வைக்காத ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
-
’விக்ரம்’ வெற்றியை அடுத்து கமலுக்கு குவியும் வாய்ப்புகள்: இதில் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகம்!
-
மை ஹீரோ, மை பிரெண்ட், மை விக்ரம்: குஷ்புவின் அசத்தல் டுவிட்!
-
பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் வசூலை முந்தி முதலிடத்தை பிடித்த விக்ரம்!