சினிமா
சிம்புக்கு இது அடுத்த ஹிட்.. தெறிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ டீசர் வீடியோ…..

சிம்பு நடிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வந்தது.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கையில் துப்பாக்கியோடு போஸ் கொடுத்து சிம்பு இந்த தகவலை டுவிட்டரில் கூறியிருந்தார். இப்படத்தி சிம்பு முத்து எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ஹிட் அடித்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் சினிமா திரையினரிடமும், ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ்/டீசர் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில், அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டீசரை பார்க்கும் போது கண்டிப்பாக இபப்டம் சிம்புவுக்கு அடுத்த ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.