சினிமா செய்திகள்
வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி.. கமல் தோல்வி.. ‘வலிமை பட அப்டேட்’ கிடைக்குமா?

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாகப் போட்டியிட்ட வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கும், வானதி ஸ்ரீநிவாசனுக்கும் இடையில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறியாக இருந்தது வந்தது. கமல்ஹாசன் 47,156 வாக்குகளைப் பெற்று இருந்தார். வானதி ஸ்ரீநிவாசன் 48,270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மயுரா எஸ் ஜெயக்குமார் 40,234 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் கொண்டு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் அதிமுக உறுதி செய்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என்று வானதி ஸ்ரீநிவாசன் பதிவிட்ட டிவிட் வைரலாகி வருகிறது.

மே 1-ம் தேதி அஜித் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து வரும் வலிமை பட அப்டேட், கொரோனா காரணமாக மீண்டும் தள்ளிப்போனது. எனவே இப்போது வலிமை பட அப்டேட் கிடைக்குமா என்று வானதி ஸ்ரீநிவாசனின் பதிவை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.












