சினிமா செய்திகள்
‘இன்னும் 10 நாட்களில் ஷீட்டிங் முடிஞ்சிடுவோம்’- வலிமை அப்டேட் தரும் போனி கபூர்!

இன்னும் 10 நாட்களில் நடிகர் அஜித்-ன் வலிமை படத்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு சமீபத்தில் தான் வரிசையாக அப்டேட் கொடுத்து வருகிறது வலிமை படக்குழு. தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும் என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.
மேலும், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் அஜித் உடன் இணைந்த போனி கபூர், தற்போது வலிமை படத்துக்குப் பின் மீண்டும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளதாகவும் உறுதிபடுத்தி உள்ளார். வலிமை படப்பிடிப்பு நிறைவடந்துடனேயே அடுத்த படத்துக்கான படப்பிடிப்புகளை தொடங்க உள்ளதாகவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் வலிமை படத்துக்கான அடுத்த அப்டேட்-க்குத் தயாராகுங்கள் என அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார். அஜித் திரைத் துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து இப்புதிய அப்டேட் வெளியாக உள்ளது. படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு வெளியாக உள்ளது.
Get ready for #ValimaiFirstSingle #30YearsOfAjithKumar @SonyMusicSouth @BoneyKapoor @VigneshShivN #HVinoth
— Raja yuvan (@thisisysr) August 2, 2021



















