வீடியோ
வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் வலிமை.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து நீண்ட காலமாக ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
சென்ற மாதம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. ஆனால் அது அஜித் ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கவில்லை.
இந்நிலையில் அஜித் ரசிகர்களை துள்ளி ஆட வைக்கும் வகையில் இன்று நாங்க வேற மாறி என்ற பாடல் லிரிக் வீடியோவை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர்.
நாங்க வேற மாறி பாடல் வரிகளை விகேன்ஷ் ஷிவன் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நடன இயக்குநர் தினேஷ் நடனம் அமைத்துள்ளார். யுவனுடன் இணைந்து அனுராக் குல்கர்னி பாடலை பாடியுள்ளார்.
பாடலின் முடிவில் வலிமை படம் 2021-ல் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக எப்போது படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதியான தேதியை அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் ஒரு வாரம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, தல அஜித் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார் என்று www.bhoomitoday.com இணையதளத்துக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
வலிமை படத்தில் தல அஜித் உடன் ஹூமா எஸ் குரேஷி, கார்த்திகேயா, பனி, சுமித்ரா, அச்சுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலவேறு நபர்கள் நடித்துள்ளனர்.
இனி ஒவ்வொரு மாதமும் வலிமை படத்தின் ஒவ்வொரு பாடல்களாக ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறுகின்றனர்.