Connect with us

ஆன்மீகம்

செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை மீண்டும் தொடக்கம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Published

on

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணோதேவி கோவிலுக்கான யாத்திரை வரவிருக்கும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால், கோவிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை மற்றும் தொடர்ந்த நிலச்சரிவுகள் காரணமாக, எப்போது யாத்திரை தொடங்கும் என்பது குறித்து சந்தேகம் நிலவியது.

இந்நிலையில், தற்போதைய காலநிலையை மதிப்பீடு செய்தபின், கோவில் நிர்வாகம் செப்டம்பர் 14 முதல் யாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

யாத்ரீகர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • பயணத்தின் போது உரிய அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும்.

  • அனுமதிக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • கோவில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Strong contextual links.