தமிழ்நாடு
தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில் பணம் வாங்கிக்கொண்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று தடுப்பூசிகளும் தனியார் மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்களில் செலுத்தப்பட்டு வருகின்றன
ஆனால் தனியார் மருத்துவமனையில் இனிமேல் இலவசமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்குரிய கட்டணத்தை தனியார் மருத்துவமனைக்கு அரசு செலுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது
இதனால் பொதுமக்கள் அரசு, தனியார் என எந்த மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்றும், மொத்தத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.















