இந்தியா
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு தக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரை முடிந்த பிறகு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பட்ஜெட் ஆவணம் இணையத்தில் வெளியிடப்படும்.
பட்ஜெட் ஆவணத்தை Union Budget Mobile App செயலி மூலமாகவும் வாசிக்க முடியும்.