சினிமா செய்திகள்
லெஜண்ட் சரவணன் படத்தின் மோஷன் போஸ்டர்: மாஸ் டைட்டில் அறிவிப்பு!
Published
11 months agoon
By
Shiva
தமிழகத்தின் பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் ஒரு தமிழ் திரைப்படம் உருவாகி வந்தது என்பதும் அவரே நடித்து தயாரித்த இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
ரூபாய் 100 கோடிக்கு மேல் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லெஜண்ட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் ஜோடியாக ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ள இந்த படத்தில் விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
You may like
-
சரவணா ஸ்ட்ரோ அதிபரின் ‘தி லெஜண்ட்’ பாடல்: செம வைரல்
-
விமல் நடித்த ‘குலசாமி’: அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
-
லெஜண்ட் சரவணன் படத்தில் குத்தாட்டம் ஆடியது இந்த பிரபல நடிகையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
-
நடிகர் வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’: அட்டகாசமான மோஷன் போஸ்டர்!
-
கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
-
’அரண்மனை 3’ மோஷன் போஸ்டர் வீடியோ வைரல்!