வணிகம்
விரைவில் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணம் குறைப்பு! முழு விவரம்!

இந்தியாவில் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளிக்கவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சில முக்கிய பரிந்துரைகளை செய்துள்ளது. அவற்றை பார்ப்போம்:

1. செட்-டாப் பாக்ஸ் ஒன்றுக்கொன்று இயங்கும் திறன் (Interoperability): எதிர்காலத்தில் ஒவ்வொரு கேபிள் ஆபரேட்டருக்கும் தனி செட்-டாப் பாக்ஸ் தேவைப்படாமல், எந்த ஆபரேட்டரிடமும் ஒரே செட்-டாப் பாக்ஸ் மூலம் சேவையை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கேபிள் ஆபரேட்டரை மாற்றும்போது செட்-டாப் பாக்ஸை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
2. நெட்வொர்க் திறன் கட்டணம் (NCF) நீக்கம்: TRAI நுகர்வோர் மீது விதிக்கப்பட்டு வந்த NCF கட்டணத்தை நீக்கியுள்ளது. இதன் மூலம் மொத்த கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது 100 இலவச சேனல்களுக்கு செலுத்தி வரும் 130 ரூபாய் கட்டணம் குறைய வாய்ப்பு. இந்த கட்டணம் பிராந்தியங்களில் உள்ள போட்டிகளுக்கு ஏற்றார் போல மாறும். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் பயனடைவார்கள்.
3. டிடிஹெச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களுக்கான தள்ளுபடி அதிகாரம்: டிடிஹெச் மற்றும் கேபிள் ஆபேர்ட்டர்கள் தங்கள் சேவைகளில் 45% வரை தள்ளுபடி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டி அதிகரித்து கட்டணம் குறைய வாய்ப்பு.
4. பொழுதுபோக்கு சேனல்கள் தேர்வு சுதந்திரம்: வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்த முடியும்.
5. TRAI கண்காணிப்பு: சேவை வழங்குநர்கள் வசூலிக்கும் கட்டணங்கள் TRAI கண்காணிப்பில் இருக்கும்.
6. தரமான சேவை: தரமான சேவையை வழங்குவதை TRAI உறுதி செய்யும்.
7. எதிர்கால மாற்றங்கள்: செட்-டாப் பாக்ஸ் ஒன்றுக்கொன்று இயங்கும் திறன் உள்ளிட்ட மேலும் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த பரிந்துரைகள்?
சமீப காலமாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு ஓடிடி தளங்களின் போட்டியால் கேபிள் டிவி மற்றும் டிடிச் அப்ரேட்டர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவே இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலன்கள்:
புதிய விதிமுறைகள் மூலம் தேர்வு சுதந்திரம் அதிகரித்து, கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் சேவைகளின் விலை குறைந்து, தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















