இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

- *29 செப்டம்பர் 2026* *நள்ளிரவு 12 மணி முதல்* *30 செப்டம்பர் 2026* *நள்ளிரவு 12 மணி வரை* *24 மணி நேரத்திற்கு* *தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழித்தடப் பேருந்துகளும் நிறுத்தப்படும்.* *தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு*
- போக்குவரத்து விதிமீறல் eChallan-னை மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கலாம்-உச்சநீதிமன்றம் யோசனை. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு eChallan மூலம் அபராதம் விதிப்பது மட்டும் போதாது; செலுத்தப்படாத அபராதங்களை மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கலாம். மத்தியமாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
- முதியோர் ஓய்வூதியம் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும் என்ற நடைமுறையை கட்டாயமாக்கக் கூடாது என CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ஆதார் இணைப்பு உள்ளிட்ட காரணங்களால் மூத்த குடிமக்கள் அலைச்சலுக்கும் சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றம் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ‘போராட்ட களமான’ பட்டினப்பாக்கம்: விஜய் அரசின் புதிய தலைமை செயலகத்துக்கு எதிர்ப்பு… கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு!
- ஸ்டிரைக்’ ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு: 17 இந்தியன் வங்கி அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா!
- மக்கள் பணி செய்யாமல் திமுக குறித்து மட்டுமே பேசும் தவெகவினர் – பிரேமலதா குற்றச்சாட்டு! ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் விமர்சனம்.
- முதல்வரின் மதுரை வருகையை ஒட்டி சமீபத்தில் லாக் அப் மரணம் அடைந்த தம்பி ஆகாஷ் டெலிசன் அவர்களின் வீட்டில் இருப்பவர்களை முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திடாமல் ,கருப்பு கொடி காட்டிடாமல் இருக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் வீட்டுக்காவலில் வைத்த காவல் துறை அதிகாரிகள் ….
- குரூப்-1 முதன்மைத் தேர்வு வினாத்தாளில் சர்ச்சைக் கேள்வி! குரூப்-1 முதன்மைத் தேர்வு வினாத்தாளில், சர். பிட்டி தியாகராயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேள்வியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை “தேச விரோதி” என அழைத்ததா? என்றும், அவர் பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கையை வெளியிட்டது இதற்கான காரணமா? என்றும் Assertion–Reason முறையில் கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி தொடர்பாக தேர்வர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
- ரஷ்யா–ஈரானை இணைக்கும் பாதை!ரகசிய இரயில் தடத்தால் அதிர்ச்சி! Fox News வெளியிட்ட பகீர் ஆவணம்
- 2-வது நாளாக பங்கு சந்தையில் ‘ரத்த ஆறு’… இன்றும் பல லட்சம் கோடி ரூபாய் ‘அம்போ’?


