இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 27.03.2026

- இன்று மாலை 6.00 மணிக்கு பிரதமர் மோடி அணைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் மேற்காசிய போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் அதன் காரணமாக நாடும் மாநிலங்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார். ஏப்ரல் 10க்குப் பிறகு வரப்பொகிறதா எனர்ஜி லாக்டவுன்?
- தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில முதலமைச்சர்கள் இந்த காணொலி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து கிராம் ரூ.13430க்கும் சவரன் ரூ.107440க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.245க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.245000க்கும் விற்பனை ஆகிறது.
- பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைத்த மத்திய அரசு. வரிகுறைப்பு வளைகுடா போரின் காரணமாக ஏற்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை தடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இல்லை. – பெட்ரோலிய வணிகர் சங்கம்.
- நிர்வாகத்தின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அமைதியான போராட்டங்களையோ அல்லது மாணவர்களின் கருத்து வெளிப்பாடுகளையோ பல்கலைக் கழகங்கள் ஒடுக்க முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு. பல்கலைக்கழகம் என்பத மாணவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலையும், கேள்வி கேட்கும் திறனையும் விமர்சன ரீதியாக ஆராயும் பணியையும் வளர்த்துக்கொள்ளும் இடமாக இருக்கிறது என்றும் அம்பேத்கர் பல்கலை மாணவர் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து.










