கிரிக்கெட்
அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படும் வீரர்கள்: இன்றைய ஐபிஎல் போட்டி ரத்தா?

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இன்றைய போட்டி ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டியில் 32வது போட்டி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் , பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட், ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட் சேத்தன் குமார், குழு மருத்துவர் அபிஜித் சால்வி மற்றும் சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் ஆகாஷ் மானே ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்றையபோட்டி புனேவில் இருந்து மும்பை மைதானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரும் நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லி அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது இன்னொரு நாளுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு தொடங்கி விட்டதால் இன்றைய போட்டி நடைபெறும் என்றே தெரிகிறது.