தமிழ்நாடு
ஏறியது போலவே இறங்கி வரும் தங்கம் விலை: பொதுமக்கள் நிம்மதி!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு சவரன் முப்பத்தி ஆறு ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் இறங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4465.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 ரூபாய் குறைந்து ரூபாய் 4462.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35720.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 24 குறைந்து ரூபாய் 35696.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4826.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38608.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 3ம், ஒரு சவரன் ரூபாய் 24ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.40 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.50 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67500.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.




















