செய்திகள்
TNUSRB தேர்வு 2025: 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

தமிழ்நாடு காவல் SI தேர்வு 2025 – 1299 பணியிடங்கள்! விண்ணப்ப தேதி வெளியானது! (மறுபதிப்பு)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) புதிய அறிவிப்பின்படி, 1299 காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு நேரடி நியமனத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 7, 2025 முதல் மே 3, 2025 வரை ஆன்லைனில் பெறப்படும்.
பணியிட விபரங்கள்:
தாலுகா SI பணியிடங்கள் – 933
ஆயுதப்படை SI பணியிடங்கள் – 366
மொத்தம்: 1299 காலிப்பணியிடங்கள்
தகுதி மற்றும் விண்ணப்பம்:
ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 7 முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி – மே 3, 2025
தேர்வு மற்றும் அறிவிப்பு:
எழுத்துத் தேர்வு நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உடல் திறன் மற்றும் நேர்காணல் தேர்வுக்கும் அழைக்கப்படுவர்.
ஒதுக்கீடு விவரங்கள்:
துறை ரீதியான ஒதுக்கீடு – 20%
வாரிசு தாரர்களுக்கு – 10%
விளையாட்டு வீரர்களுக்கு – 10%



