வேலைவாய்ப்பு
TNUSRB SI தேர்வு அறிவிப்பு வெளியீடு: 1299 காலிப்பணியிடங்கள் – இளங்கலை பட்டம் இருந்தால் போதும்!

TNUSRB SI தேர்வு 2025 அறிவிப்பு – 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம், காவல் துறையில் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களை இங்கே பார்ப்போம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
மொத்தம்: 1,299 காலிப்பணியிடங்கள்.
தாலுகா பிரிவு:
ஆண்கள் – 654
பெண்கள் – 279
மொத்தம்: 933
ஆயுதப்படை பிரிவு:
ஆண்கள் – 255
பெண்கள் – 11
மொத்தம்: 366
SC/ST அடிப்படையில்: 53 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
தேர்வானவர்கள் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை ஊதியம் பெறுவர்.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் முடித்திருப்பது கட்டாயம்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்புவோர் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டமைப்பு:
தமிழ் மொழி தகுதித் தேர்வு (அவசியம்)
முதன்மை எழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
உடற்கூறு அளத்தல்
உடற்தகுதித் தேர்வு
உடல்திறன் போட்டி
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுமக்களுக்கு ரூ.500
ஓபன் + டிபார்ட்மென்டல் கோட்டா விண்ணப்பதாரர்கள் ரூ.1000
கடைசி நாள்:
விண்ணப்பிக்க மே 3, 2025 கடைசி நாள் ஆகும்.



