வேலைவாய்ப்பு
TNUSRB 2025: காவல் துணை ஆய்வாளர் பணிக்கு 1,299 காலிப்பணியிடங்கள் – இப்போது விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் பணியிடங்கள் – விரைந்து விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2025-ஆம் ஆண்டிற்கான காவல் துணை ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 1,299 பணியிடங்கள் உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 5ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
SI (தாலுக்) – 933 இடங்கள்
ஆண்கள்: 654
பெண்கள்: 279
SI (AR) – 366 இடங்கள்
ஆண்கள்: 255
பெண்கள்: 111
மொத்தம்: 1,299 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்
10+2+3/4/5 அல்லது 10+3+2/3 முறையில் கல்வி முடித்திருக்கலாம்
வயது வரம்பு (01.07.2025க்கு அடிப்படையில்):
பொது பிரிவினர்: 20 – 30 வயது
BC/MBC/OBC/DNC: 20 – 32 வயது
SC/ST/திருநங்கைகள்: 20 – 35 வயது
ஆதரவற்ற கைம்பெண்கள்: 20 – 37 வயது
முன்னாள் ராணுவ வீரர்கள்/CAPF பணியாளர்கள்: 20 – 47 வயது
சம்பளம்:
ரூ. 36,900 – 1,16,600 வரை மாத ஊதியம்
தேர்வு முறை:
தமிழ் மொழித் தகுதி தேர்வு
முதன்மை எழுத்துத் தேர்வு
உடல் அளவீட்டு தேர்வு
உடல் திறன் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்முகத் தேர்வு (Viva Voce)
விண்ணப்ப கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள்: ₹500
துறைரீதியான விண்ணப்பதாரர்கள்: ₹1,000
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tnusrb.tn.gov.in
விண்ணப்ப தொடக்கம்: ஏப்ரல் 7
கடைசி நாள்: மே 5
மேலும் விவரங்களுக்கு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் பார்வையிடலாம்.









