வேலைவாய்ப்பு
தமிழக கூட்டுறவுத் துறையில் 3,353 புதிய வேலைவாய்ப்பு! அமைச்சர் உறுதி!

கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு புயல்! 3,353 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு வேலைக்கு ஆசை கொண்ட இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கூட்டுறவுத் துறையில் 3,353 புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்த ஆட்கள் மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) வாயிலாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
என்ன வேலைவாய்ப்புகள் நிரப்பப்படவுள்ளது?
கூட்டுறவு சங்கங்களில்:
உதவியாளர், விற்பனையாளர், கட்டுநர் போன்ற பதவிகள்.நியாய விலை கடைகளில்:
விற்பனையாளர் மற்றும் நிர்வாக பணியிடங்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு நடவடிக்கைகள்:
13,266 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, 9,913 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மீதமுள்ள 3,353 பணியிடங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
நலத்திட்டங்களில் சாதனை:
ரூ.19,145 கோடி கடன்தள்ளுபடி மூலம் 38.82 லட்சம் பயனாளர்கள் உதவியடைந்துள்ளனர்.
2024-25 இல் மட்டும் ரூ.16,410 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11,870 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை மேம்பாடு:
6,215 வாடகைக் கட்டடங்களில் இயங்கும் கடைகளில் 3,502 கடைகள் சொந்த கட்டடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றன.
மீதமுள்ள 2,713 கடைகளும் விரைவில் சொந்த கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யப்படும்.
கூட்டுறவு சங்க தேர்தல் அப்டேட்:
உறுப்பினர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
1.59 கோடி உறுப்பினர்களில் 97.83 லட்சம் பேர் ஆதார் இணைப்பை முடித்துள்ளனர்.
முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும்.
வேலை தேடுபவர்கள் கவனிக்க:
விரைவில் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும்.
தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு இது ஒரு தங்க வாய்ப்பு!























