தமிழ்நாடு
ஒத்திவைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் ரத்து செய்யப்பட்டன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை II, 2013-2018 பதவிக்கான நேர்முகத் தேர்வானது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேது குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மேற்கூறிய பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற 19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறிய நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி மற்றும் நேரமானது குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.















