Connect with us

வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி: குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

Published

on

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 வேலைக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 6491

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1.Village Administrative Officer (VAO) – 297
2.Junior Assistant (Non – Security) – 2688
3. Junior Assistant (Security) – 104
4. Bill Collector Grade-I – 34
5. Field Surveyor – 509
6. Draftsman – 74
7. Typist – 1901
8. Steno-Typist (Grade–III) – 784

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை சான்று அல்லது இளநிலை சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது இரு மொழிகளில் ஏதாவதொன்றில் உயர்நிலை தட்டச்சு திறன் மற்றொன்றில் இளங்கலை தட்டச்சு திறன் சான்று பெற்றிருப்பவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் உயர்நிலை அல்லது இரு மொழிகளில் ஏதாவதொன்றில் உயர்நிலை மற்றொன்றில் இளநிலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மேல் அதாவது பிளஸ் டூ, பட்டயம், பட்டம் போன்ற கூடுதல் கல்வித்தகுதிகள் பெற்றிருப்பின் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பணி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2019

தேர்வு கட்டணம் மற்றும் பதிவு கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களைப் பதிவு செய்து டிஎன்எஸ்சி-யால் வழங்கப்படும் நிரந்தரப் பதிவு எண்ணைப் பெற்றுக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.07.2019

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?