சினிமா செய்திகள்
இது என்.ஜி.கே. டீஸர் அப்டேட்!

தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்.ஜி.கே படம் பொங்கல் ரேஸில் கூட கலந்து கொள்ள முடியாமல் வெகு தாமதமாக தயாராகி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் படமாக உருவாகியுள்ள என்.ஜி.கே – நந்த கோபால குமரன் படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸாகிறது.
சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியின் தேவ் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தேவ் படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் என்.ஜி.கே டீஸரும் வெளியிடப்படுகிறது. 1.30 நிமிடங்களே இந்த டீஸரின் நீளம் இருக்கும் என்றும், சூர்யாவின் மாஸ் காட்சிகள் நிறைந்ததாக டீஸர் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காதலர் தினத்தை தேவ் மற்றும் என்.ஜி.கே டீஸருடன் சூர்யா ரசிகர்கள் கொண்டாட உள்ளனர்.









