Connect with us

தமிழ்நாடு

‘உச்சநீதிமன்ற ஆணை உள்ளது… சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குக’- தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திருமா

Published

on

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அவர் இது பற்றிப் பேசுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை வழங்கவேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை மேலும் காலந்தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளின் உயிருக்கு கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தைக் கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து 2020 ஆண்டு வழக்கு பதிவுசெய்து விசாரித்தது. கைது நடவடிக்கையை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமெனவும், மாநில அரசுகள் உயர் அதிகாரக் குழுக்களை அமைத்து தகுதியான கைதிகளைப் பிணையில் விடுவிக்கவேண்டுமெனவும் ஆணையிட்டது.

அந்த வழக்கை மீண்டும் விசாரித்து 07.05.2021 அன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2020ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுக்களின் பரிந்துரைகளின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் 90 நாட்களுக்குப் பிணை வழங்க வேண்டுமென்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று (16.07.2021) மீண்டும் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ’தனது ஆணையின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் எவரையும் இப்போது சிறையில் அடைக்கக் கூடாது, உச்சநீதிமன்றம் அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரையும் தொடர்ந்து பிணையில் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு உயர்அதிகாரக் குழு ஒன்றை அமைத்தது. சிறைத்துறை டிஜிபி, உள்துறை இணை செயலர், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா அவர்கள் தலைமையில் 19.05.2021 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கைதிகளுக்குப் பிணை வழங்குவதுகுறித்து 9 பரிந்துரைகளை அக்குழு அரசுக்கு அளித்தது. ஆனால் அதன்படி எவருக்கும் இதுவரை பிணை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனிடையில் உச்சநீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் மேலும் சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. பிணை வழங்குவதில் கைதியின் வயது, அவருக்குள்ள இணை நோய்களின் விவரம் ஆகிய அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள கைதிகள் நூற்றுக் கணக்கானோர் கொரோனாவால்பாதிக்கப்படடுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், உயர் அதிகாரக் குழு பரிந்துரைத்தும் கைதிகளுக்குப் பிணை வழங்காதது ஏன் என்பது புரியவில்லை. இனியும் இதில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக தகுதியான கைதிகளுக்குப் பிணை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்’ என விரிவாக அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chỉ hiển thị có lượt thích. : upptäck hemligheterna bakom din vistelse. Thẩm Úc vừa về nhà thì đã lên phòng sách, ta chạy thục mạng về phòng để bình ổn.