Connect with us

தமிழ்நாடு

ஸ்டேன் சாமி மரணம்: பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்- திருமா அறிவிப்பு

Published

on

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மரணத்துக்கு பாஜக அரசை குற்றம் சாட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர், ‘ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றி வந்த 84 வயதான ஸ்டேன் சாமியை பொய் வழக்கில் கைது செய்து அவர் மரணமடைவதற்கு பாஜக அரசு காரணமாகியுள்ளது. மேலும் 19 பேர் இதேபோல் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக அரசின் இந்த பாசிசப் போக்கைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


பீமா கோரேகான் என்னுமிடத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது பேஷ்வாக்களின் படையை மஹர் ராணுவ வீரர்கள் தோற்கடித்த வெற்றியின் 200 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடுவதற்காக 2018 ஜனவரி 1 ஆம் தேதி தலித்துகள் இலட்சக் கணக்கில் கூடினார்கள். அவர்கள் மீது சனாதன பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். தலித்துகள் பலரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது சம்பாஜி பிடே, மிலிந்த் ஏக்போடே என்பவர்கள்தான் எனப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள்மீது வழக்கும் பதியப்பட்டது. ஆனால் பாஜக ஆதரவாளர்களான அவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் பீமா கோரேகானுக்கு அருகில் நடத்தப்பட்ட எல்கார் பரிசத் விழாவோடோ, அதன் பிறகு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தோடோ கொஞ்சமும் சம்பந்தமில்லாத பாதிரியார் ஸ்டேன் சாமி, பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் 20 பேரை அப்போதிருந்த மகராஷ்டிர மாநில பாஜக அரசு பொய்வழக்கில் கைது செய்து சிறைப்படுத்தியது. அங்கு ஆட்சி மாற்றம் நடந்ததும் தமது சதி அம்பலமாகிவிடும் என அஞ்சிய பாஜக அரசு அந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுவிட்டது.

பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவர். அவரை மோசமான நிலையில் சிறையில் வைத்திருந்ததால் அங்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே பாஜக அரசு அனுமதி தந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய சாவுக்கு பாஜக அரசே பொறுப்பு. அவரைப்போலவே இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மற்ற 19 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.


பாஜக ஆட்சியில் இல்லாதபோது சனாதன் சன்ஸ்தா என்ற சனாதன பயங்கரவாத அமைப்பு நாடு முழுவதும் சிந்தனையாளர்களை செயற்பாட்டாளர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்தது. இப்போது சட்டரீதியாகவே அந்தக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதைத்தான் பாதிரியார் ஸ்டான் சாமியின் மரணம் காட்டுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாளை (08.07.2021) தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளால் ஒருங்கிணைக்கப்படும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் திருமா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்7 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Making digital tools accessible for everyone. Surowce do produkcji suplementów diety. ??.