உலகம்
ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறட்சி.. 3 வருடமாக மழையின்றி மக்கள் அவதி!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று வருடமாக மழை பெய்யாததால் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியா தற்போது மோசமான வறட்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த 800-950 வருடங்களில் இல்லாத வறட்சி என்று கூறப்படுகிறது.
கடந்த 30 மாதங்களாக அங்கு மிக அதிக அளவில் வெயில் அடிக்கிறது. அதேபோல் மூன்று வருடமாக அங்கு துளி மழை கூட பெய்யவில்லை.

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறட்சி
முக்கியமாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் அதிக வறட்சி நிலவுகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசும், மக்களும் திணறிய வறுகிறார்கள்.
அங்கு நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்துவிட்டது. இதனால் வறுமையும் அதிகம் ஆகியுள்ளது.



















