உலகம்
ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு வந்த ஆப்பிள் ஜூஸ்: அதிர்ச்சியில் இளம்பெண்
Published
3 years agoon
By
Shiva
உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவது வழக்கமாகி விட்ட நிலையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு ஆப்பிள் ஜூஸ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவது எளிதாக இருந்தாலும் அதில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தெரிந்ததே. பலருக்கு செல்போன்களுக்கு பதிலாக பல்வேறு பொருட்கள் வந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆப்பிள் 12 ஐபோன் ஆர்டர் செய்தார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் டெலிவரி நிறுவனத்திடம் புகார் செய்தபோது, டெலிவரி நிறுவனம் இதற்கு பொறுப்பு ஏற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் வந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பல்வேறு கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
93% சொத்துக்களை இழந்த ஆசியாவின் 2வது பணக்காரர்… என்ன காரணம்?
ஜொமைட்டோ டெலிவரி ஊழியர்கள் இப்படியும் ஏமாற்றுகிறார்களா? சி.இ.ஓ அதிர்ச்சி!
60 ஆண்டுகளுக்கு பின் குறைந்த சீன மக்கள் தொகை.. காரணம் கொரோனாவா? குடும்ப கட்டுப்பாடா?
இந்தியாவில் உள்ள 3700 அணைகளுக்கு ஆபத்து.. ஐநா எச்சரிக்கையால் பரபரப்பு!
ஆன்லைனில் டாக்டரை தேடிய டெலிவரி பாய்.. திடீரென மாயமாய் மறைந்த ரூ.56,000 பணம்!
ரூ.11,990 மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட் வெறும் ரூ.1499க்கு விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி தள்ளுபடி