சினிமா
நடிகை ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது!

தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ரம்பா. சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.
90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் திகழ்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்துக் காலாக்கி வந்த ரம்பா, இவர் தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010ம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லாவன்யா என்ற 7 வயது மகளும், 3 வயதில் சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்றாவது முறையாகக் கர்ப்பமாகி அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிலையில் மூன்றாவது முறை கர்ப்பமாக இருந்த ரம்பாவிற்குக் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரம்பா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார்.

















