Connect with us

சினிமா

திரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…

Published

on

பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் ட்ரெயிலர்கள் வெளியாகும்போதுதான் எந்த திரைப்படம் ட்ரெண்டிங்கில் வருகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களின் ட்ரெயிலர்கள் முதல் மூன்று ட்ரெண்டிங்கில் இருந்து போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன… அவற்றை பார்க்கலாம்…

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று மாலை யுட்யூபில் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பார்வையை பெற்றுள்ள காப்பான் திரைப்படம் யுட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்குமுன் சூர்யாவுக்கு எப்போ படம் ஹிட் ஆனது என்று யோசிக்கும் அளவுக்கு சூர்யாவின் நிலைமை உள்ளது. மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவாது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. செப்.20 தெரிந்துவிடும்… காப்பான் சூர்யாவை காப்பாற்றினாரா இல்லையா என்பதை…

முதல் ட்ரெயிலர் சாயிஷாவுக்கும் சூர்யாவுக்குமான காதலை காட்டியது என்றால் இந்த ட்ரெயிலர் சூர்யாவின் அதிரடி காட்சிகளுடன் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுட்யூபில் இரண்டாவது இடத்தில் இருப்பது விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கியுள்ள ஆக்‌ஷன் படம். சுந்தர் சி. தன்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து வெளியில் வந்து படத்தின் பெயரைப்போல ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. சில காட்சிகள் சமீபத்தில் வெளியான சாஹோ படத்தின் காட்சிகளை நினைவூட்டுகின்றன என்றாலும் சுந்தர் சி. நிச்சயம் நம் காசுக்கு மரியாதை சேர்ப்பார் என்று நம்பலாம். இப்போதுதான் டீசர் வெளியாகி இரண்டு நாள்களில் 3.7மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இரும்புத்திரைக்குப் பிறகு பெரிய வெற்றி இல்லாத விஷாலுக்கு இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என அவரை போல நாமும் நம்பலாம். படப்பிடிப்பு விரைவில் முடிந்து திரைக்கு வர உள்ளது ஆக்‌ஷன் நிறைந்த ஆக்‌ஷன் படம்…

ட்ரெண்டிங்கில் 3வது இடத்தில் இருக்கும் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை. ரஜினி முருகனுக்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்கிற எஸ் கே. கடைகுட்டி சிங்கத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு குடும்ப கதையை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். பாண்டிராஜுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல நம்ம வீட்டு பிள்ளையும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் இதுவரை 2.5மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் எஸ்கேவுக்கு இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என நம்பலாம்

இது ட்ரெயிலர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. ட்ரெயிலர்களை பற்றிய அறிமுகம் தான்…

தமிழ்நாடு2 hours ago

32 சிம்கார்டு, 28 ஆண்கள், 4 திருமணம்.. கடைசியில் போலீசில் சிக்கிய அபிநயா!

தமிழ்நாடு2 hours ago

திமுகவில் இருந்து விலகுகிறாரா ஆர்.எஸ் பாரதி? ஆதங்க பேச்சால் பரபரப்பு

சினிமா செய்திகள்4 hours ago

பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்.. ‘பாபா’ டிரைலர் ரிலீஸ்

தமிழ்நாடு4 hours ago

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே துரோகிகள்: அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்

சினிமா செய்திகள்6 hours ago

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து.. பலியான பிரபலம் இவரா?

சினிமா செய்திகள்7 hours ago

‘தளபதி 67’ படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.300 கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

வேலைவாய்ப்பு7 hours ago

ரூ.40,000 ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு9 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 hours ago

வழுக்கை தலையில் முடிமாற்று சிகிச்சை.. 30 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

வணிகம்12 hours ago

மீண்டும் இன்று தங்கம் விலை சரிவு (03/12/2022)!

டிவி6 days ago

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆரோக்கியம்7 days ago

தோல் தடிப்பைக் குணமாக்கும் கருமிளகு!

வணிகம்6 days ago

மீண்டும் தங்கம் விலை குறைந்தது (28/11/2022)!

தமிழ்நாடு6 days ago

உங்கள் போன் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

இந்தியா7 days ago

சற்றுமுன் இனி ‘பிறப்புச் சான்றிதழ்’ கட்டாயம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு!

ஆரோக்கியம்6 days ago

மஞ்சள் காமாலை, சிறுநீர் நோய்கள் குணமாக்கு கீழாநெல்லி!

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை (27/11/2022)!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!