தமிழ்நாடு
நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் திடீர் மாற்றம்!

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி மையம் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 7 தடுப்பூசி மையங்கள் நடைபெற்று உள்ளதை அடுத்து லட்சக்கணக்கானோர் அதில் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம், அதன் பின்னர் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை மாற்றப் பட்டது என்பதும் கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை எட்டாவது தடுப்பூசி மையம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மையம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த எட்டாவது மெகா தடுப்பூசி முகாம் அதற்கு பதிலாக நவம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பலர் சொந்த ஊர் சென்று இருக்கிறார்கள் என்பதால் இந்த தடுப்பூசி முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



















