Connect with us

சினிமா

விக்ரம் பிறந்தநாளுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ‘தங்கலான்’ படக்குழு!

Published

on

நடிகர் விக்ரமின் பிறந்தநாளுக்கு ‘தங்கலான்’ படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘காலா’ உள்ளிட்ட முக்கிய படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குநர் இரஞ்சித். ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகருகிறத்ய்’ ஆகிய படங்களுக்கு பிறகு இப்பொழுது விக்ரம் நடிப்பில் இவரது இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். கேஜிஎப் களத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. கர்நாடகா, மதுரை ஆகிய இடங்களில் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்து வருகிறது. மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடித்து இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட முயற்சி செய்கிறோம் என இயக்குநர் இரஞ்சித் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த மாதம் 17ஆம் தேதி நடிகர் விக்ரமின் பிறந்தநாள் வர இருக்கிறது. இதற்காக ‘தங்கலான்’ படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, Slice of Flesh என்ற டேக்குடன் ‘தங்கலான்’ படத்தின் க்ளிம்ப்ஸை வெளியிட உள்ளது. ‘தங்கலான்’ படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே நீண்ட வளர்த்த முடியுடன் நடிகர் விக்ரம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வெளியாக இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தப் படத்தை முடித்த பிறகு ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தை அறிவித்து இருக்கிறார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறாரா என்பதை இந்த முடிவு செய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்டு இருந்தார் இரஞ்சித். ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?