சினிமா செய்திகள்
’தளபதி 66’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? எங்கே?

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஜூன் இரண்டாம் தேதி முதல் சென்னையில் ’தளபதி 66’ படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி முடிந்து விட்டதை அடுத்து ஜூன் 2ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்திற்காக தமன் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் அதில் ஒரு பாடல் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில் 2வது பாடல் சென்னையில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார், பிரபு, சங்கீதா, யோகி பாபு மற்றும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, ஜெயசுதா, ஆகியோர் நடித்து வருகின்றனர். வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.





















