தமிழ்நாடு
புதுவையை அடுத்து தமிழகத்திலும் உயர்கிறதா மதுபான விலை?

புதுவையில் சமீபத்தில் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழகத்திலும் விரைவில் மதுபான விலைகள் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மதுபான பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவையில் சமீபத்தில் மதுபான விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் மதுபான விலை உயர்த்தப்பட இருப்பதாகவும் இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மற்றும் குடோன்களில் பழைய விலையில் உள்ள மதுபானங்களை உடனடியாக விற்பனை செய்து முடிக்க டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பழைய விலையில் உள்ள மது பானங்களை மதுப்பிரியர்களுக்கு விற்பனையாளர்கள் வலுக்கட்டாயமாக திணித்து வருவதாக கூறப்படுகிறது.
பழைய விலையில் உள்ள மதுபானங்கள் அனைத்தும் விற்பனையாகி முடித்தவுடன் புதிய விலையில் மதுபானங்கள் மது ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் மதுபான விலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மதுபான பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பங்கு மதுபானத்தில் இருந்து கிடைத்த வருவதை அடுத்து மதுபான விலை அதிகரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு பல கோடிகளை செலவு செய்து வரும் நிலையில் மதுபான விலை உயர்வின் மூலம் அதனை ஈடுகட்டலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















