தமிழ்நாடு
அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா புகார் எண் அறிமுகம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா புகார் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
18005991500 என்ற இந்த கட்டணமில்லா போன் எண்ணை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம். அரசு பேருந்து பயணிகள் இந்த கட்டணமில்லா எண்ணிற்கு போன் செய்து எண்ணை அழைத்து எளிதாகப் புகார் அளிக்கலாம்.
மேலும் அரசு பஸ் (http://arasubus.tn.gov.in/) என்ற இணையதளமும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குச் சென்றும் அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

Tamil Nadu Transport Department Launched Toll Free Complaint Number To Govt Buses
இந்த இணையதளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்து சேவைகள், கிலோ மீட்டர் அளவில் பேருந்து கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ள முடியும்.