இந்தியா
பள்ளி பேருந்து விபத்து.. மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது மாணவன்!
Published
2 months agoon
By
Shiva
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாரடைப்பால் அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக உள்ளே இருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரு மாணவர் பேச்சு மூச்சு இன்றி இருந்ததை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். ஒரு சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் பள்ளி பேருந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ச்சி அடைந்த மாணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வயதில் மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
You may like
-
தேனிலவு சென்ற இடத்தில் விபரீதம்.. பரிதாபமாக பலியான புதுமாப்பிள்ளை!
-
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!
-
கார் பானெட்டில் தொங்கிய முதியவர்… 8 கிமீ இழுத்து சென்ற கொடூர டிரைவர்!
-
வகுப்பறையில் திடீரென உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி காரணம்!
-
மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பல்கலைகழகம்!
-
424 தரைதள பேருந்துகளை வாங்கும் தமிழ்நாடு அரசு.. தரைதள பேருந்துகள் என்றால் என்ன?