Connect with us

தமிழ்நாடு

தமிழகம்: டிச.24 கிறிஸ்துமஸ் முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published

on

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 24 (செவ்வாய்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இதனை அறிவித்துள்ளார்.

ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில்:

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 24ஆம் தேதி (கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள்) உள்ளூர் விடுமுறையாக இருக்கும்.
  • இந்த விடுமுறைக்கு ஈடாக, டிசம்பர் 28ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.

அதேசமயம், 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டம் படி, டிச.24 விடுமுறை முழுமையான சிறப்பு விடுமுறையாக இருக்காது. இதனால், தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அவசர பணிகளுக்காக தேவையான பணியாளர்களுடன் இயங்கும்.

கிறிஸ்துமஸ் விழா:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இந்த வருடமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உற்சாகமாகக் களைகட்டத் தொடங்கியுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Premium yacht charter & boat rental in turkey charteringa luxury yacht or rent a bare boat online easily with yachttogo's powerful booking system..