Connect with us

தமிழ்நாடு

பயிர் காப்பீடு: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published

on

பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ மத்திய அரசின்‌ பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும்‌ என என வலியுறுத்தி பிரதமர்‌ மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ கடிதம்‌ எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ மத்திய அரசின்‌ பங்களிப்பினைக்‌ குறைக்கும்‌ வகையில்‌, உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும்‌ முறையை நீக்கி, மாநிலத்தில்‌ உள்ள விவசாயிகளின்‌ நலனைக்‌ கருத்தில்கொண்டு, முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில்‌ காப்பீட்டுக்‌ கட்டணப்‌ பங்கினைத்‌ திரும்ப மாற்றியமைக்க வேண்டும்

வேளாண்‌ துறையில்‌ விவசாயிகளின்‌ பொருளாதாரத்தினை மேம்படுத்தும்‌ நோக்கில்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை எனப்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டுப்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில்‌ சாகுபடிப்‌ பரப்பளவினை அதிகரித்தல்‌, ஒரு முறைக்கும்‌ மேல்‌ சாகுபடி செய்யும்‌ பரப்பினை இரட்டிப்பாக்குதல்‌ மற்றும்‌ உணவு தானியங்களின்‌ உற்பத்தித்‌ திறனை அதிகரித்தல்‌ ஆகிய மூன்று தொலைநோக்குப்‌ பார்வையுடன்‌ வேளாண்மைக்கெனத்‌ தனி வரவு-செலவுத்‌ திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல்‌ தாக்கல்‌ செய்யத்‌ திட்டமிட்டுள்ளது.

மேலும்‌, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும்‌ முக்கியத்‌ திட்டங்களில்‌ ஒன்றான பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தினைத்த்‌ தமிழ்நாடு வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால்‌, காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும்‌, பதிவு செய்துள்ள விவசாயிகளின்‌ எண்ணிக்கையும்‌ உயர்ந்துள்ளது

இந்த நிலையில்‌, காப்பீட்டுக்‌ கட்டண மானியத்தில்‌ மத்திய அரசின்‌ பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து, பாசனப்‌ பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும்‌, மானாவாரிப்‌ பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும்‌ குறைத்து நிர்ணயித்திருப்பதால்‌, 2016-2017இல்‌ 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின்‌ பங்கு, 2020-2021இல்‌ 1,918 கோடி ரூபாயாக, அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று உள்ள இந்தக்‌ காலக்கட்டத்தில்‌ மாநில அரசின்‌ நிதிச்சுமை அதிகரித்து வரும்‌ நிலையில்‌, இத்திட்டத்தைத்‌ தொடர்ந்து செயல்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும்‌, கடினமாகவும்‌ உள்ளது. மத்திய அரசின்‌ இந்த நடவடிக்கை இத்திட்டத்தின்‌ நோக்கத்தையே முடக்கியுள்ளது.

எனவே, பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ ஒன்றிய அரசின்‌ பங்கீட்டினைக்‌ குறைக்கும்‌ வகையில்‌, உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும்‌ முறையை நீக்கி, மாநிலத்தில்‌ உள்ள விவசாயிகளின்‌ நலனைக்‌ கருத்தில்கொண்டு, காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ மத்திய அரசு, மாநில அரசு மற்றும்‌ விவசாயிகளின்‌ பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில்‌ உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.