சினிமா செய்திகள்
இந்திய வீரர்களை சியர் அப் செய்யப்போகும் தமிழ் நடிகைகள்!

இந்தியா – இங்கிலாந்து மோதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் சிலர் நேரில் சென்றுள்ளனர்.
உலகக்கோப்பை போட்டி மே மாத இறுதியில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஒரு டிரா மற்றும் 6 வெற்றிகள் என வீழ்த்த முடியாத அணியாக வீரநடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
இன்றைய போட்டியில், இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் சூழல் உள்ளதால், அந்த அணி தனது முழு பலத்தையும் இந்திய அணிக்கு எதிராக திரட்டி நிற்கும் என்பதால், இன்றைய போட்டி சுவாரஸ்யத்துக்கு சற்றும் குறைவின்றி இருக்கும்.
இந்த சூழலில், இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்த தமிழ்நாட்டின் முன்னணி நடிகைகளான த்ரிஷா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் இங்கிலாந்துக்கு சென்று நேரடியாக போட்டியைக் காண திட்டமிட்டுள்ளனர். அந்த அறிவிப்பை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.