தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த சுப்பிரமணியன் சுவாமி!
Published
2 months agoon
By
Shiva
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு கட்டுப்பாட்டில் இந்து ஆலயங்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குரல் கொடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் எந்த ஒரு மாநில அரசும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சுப்பிரமணியசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நீண்ட நாட்களாக தமிழகத்தில் இந்து ஆலயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26 எதிரானது என்றும் கூறியுள்ளார்.
மேலும் 2014ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பில் எந்த ஒரு ஆலயத்தின் உரிமைகளையும் மாநில அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் கூறியபடி முதல்வர் ஸ்டாலின் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You may like
’வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை.. முதலமைச்சரை சந்தித்து புகார் கூறிய விஜய்ரசிகர்கள்!
பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல.. சுப்பிரமணியன் சுவாமி
முதல்வர் முக ஸ்டாலின் – டாடா சந்திரசேகரன் சந்திப்பு.. தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமா?
பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம்? முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வரின் பாதுகாப்பு குழுவில் 9 சிங்கப்பெண்கள்.. தேர்வு பெற்றது எப்படி?
‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!