Connect with us

தமிழ்நாடு

பாஜகவின் அரசப் பயங்கரவாதம்- ஸ்டான் சுவாமி மரணத்தால் திருமா காட்டம்!!!

Published

on

பிரபல செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வந்த நிலையில், இன்று உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவர் பழங்குடியின மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த பீமா கொரேகன் சம்பவத்தையொட்டி கடும் சட்டங்களுக்குக் கீழ் கைது செய்யப்பட்டார் சுவாமி.

இந்நிலையில் அவர் மரணம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. இதை கொரோனா மரணமாகக் கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகள் மத்தியில் அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஸ்டான் லூர்துசாமி என்ற கத்தோலிக்க பாதிரியார் ஆவார். அவரைக் கடந்த ஆண்டு பாஜக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்தது. பீமா கோரேகான் என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையோடு அவரைத் தொடர்புபடுத்தி பாஜக அரசு அவரை சிறையில் அடைத்தது.

இந்தியாவெங்கும் மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பேராசிரியர்கள் இதே பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஸ்டான் சாமி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அவர் தனியார் மருத்துவமனையின்றில் சேர்க்கப்பட்டார். 84 வயதான அவருக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 .30 மணிக்கு அவர் உயிரிழந்தார் என்ற இந்த செய்தியை நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை படுத்தப்பட்டிருக்கும் பேராசிரியரும் புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டேவை பிணையில் விடுவிக்க வேண்டுகோள் விடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகாராஷ்டிர மாநில அமைச்சர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தோம். இந்தச் சூழலில் ஸ்டான் சாமி அவர்களுடைய மரணம் நேர்ந்திருக்கிறது.

பீமா கோரேகான் வழக்கு என்பது கம்ப்யூட்டரில் உளவு நிறுவனங்களே பொய்யான ஆதாரங்களைப் பதியவைத்து போலியாக உருவாக்கப்பட்ட வழக்குதான் என்பதைத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர். இந்தச் சூழலில் நீதிமன்றம் தொடர்ந்து இதில் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது.
ஏற்கனவே சனாதன் சன்ஸ்தா என்ற கொலை அமைப்பின் மூலமாக கோவிந்த் பன்ஸாரே, நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி, ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்குகளில் தொடர்புள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்பை இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து நடவடிக்கை எடுக்க பாஜக அரசு முன்வரவில்லை. முன்பு சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பு செய்த படுகொலைகளை இப்போது சட்டத்தின் துணையோடு பாஜக அரசு செய்ய முற்பட்டு இருக்கிறது என்பதையே ஸ்டான் சாமி அவர்களுடைய மரணம் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கும், சிறைப் படுத்தப் பட்டிருக்கும் சிந்தனையாளர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மரணமடைந்த மனித உரிமைப் போராளி ஸ்டான் சாமி அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
Sikkim game recharge. Quantité de frosted fluff monsieur cannabishop. Dieses cookie enthält keine personenbezogenen daten und wird verworfen, wenn du dein browser schließt.