Connect with us

தமிழ்நாடு

யோக்கியர் எதற்காக பயப்பட வேண்டும்? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விளாசிய ஸ்டாலின்!

Published

on

கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொடநாடு சம்பந்தப்பட்ட கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதல்வர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார். பேசுவதில் அவருக்கும் தெளிவில்லை. கேட்பவர்களுக்கும் தலைசுற்றுகிறது. என்ன தயக்கம் அவருக்கு இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார் முதல்வர்.

கனகராஜ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள கனகராஜின் சகோதரர் தனபால், இதனை சிபிஐ விசாரித்தால் பழனிசாமி நிச்சயம் சிக்குவார் என பேட்டியளித்துள்ளார். சயன், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாத முதல்வர், இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து வேண்டுமென்றே அவதூறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார்.

குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும் வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா? அதுவும் இந்த நாட்டின் முதல்வர் சம்பந்தப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கு அது. சயனுக்கோ மனோஜ் என்பவருக்கோ கனகராஜுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது என்பது சட்டப்படியான நடவடிக்கை தான் அதனை திமுக வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்.

இது போன்ற சிறு பிள்ளைத்தனமான கண்டு பிடிப்புகளைச் செய்து, நாட்டு மக்களின் நகைப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு விசாரணையை அவர் எதிர்கொள்ளத் துணிய வேண்டும். எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, இது தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கோழைத்தனத்தோடு ஒரு முதல்வர் மிரட்டுகிறார். தொலைக்காட்சி சேனல்களின் கேபிள் வயர்களை துண்டிப்பதாக வேறு தகவல்கள் வருகின்றன. இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? யோக்கியர் என்றால் எதற்காக பயப்பட வேண்டும்? என ஸ்டாலின் தனது அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
Rekrutacja do szkół średnich. Pølsekursus hos folkets madhus. Bliv medlem af borgernes parti.