தமிழ்நாடு
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி சஸ்பெண்ட்!

தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கு தீவிரமாக தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இதுகுறித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வலியுறுத்தலை அடுத்து சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் இந்த வழக்கு இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















