தமிழ்நாடு
8-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு; அமைச்சர் விளக்கம்!

பொதுத்தேர்வு எழுதுவதால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்று அறிக்கை அனுப்பி இருந்தது சர்ச்சை ஆனது.
8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் ஏதுமில்லை என்று தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெளிவு படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்ட மாணவர்கள், விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


















