தமிழ்நாடு
சென்னையில் மெட்ரோ லைட்.. மெட்ரோ ரயில் தெரியும்.. அது என்ன மெட்ரோ லைட்?

சென்னையில் விரைவில் மெட்ரோ விளக்கு ரயில் சேவை அறிமுகம் செய்ய சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
மெட்ரோ ரயிலின் ஒரு மிதமான வடிவமைப்பே மெட்ரோ லைட். இதில் ட்ராம் ரயில்கள் போல இரண்டு பெட்டிகள் இருக்கும்.
மெட்ரோ லைட் ஓட தனியாக பிரிட்ஜ், சுரங்கப் பாதை போன்றவை தேவையில்லை. இதை சாலையிலேயே இயக்க முடியும். ஆனால் அதற்கான சிறப்பு டிராக் பாதைகள் மட்டும் அமைக்க வேண்டும். டிராம் ரயில் சேவையின் புதிய வடிவமே மெட்ரோ லைட் எனவும் கூறலாம்.
சென்னையில் தனிநபர் வாகன பயன்பாட்டை 50 சதவிகிதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ள
மெட்ரோ லைட் சேவையைச் சென்னையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், குறைந்த செலவில் செயல்படுத்தக் கூடிய போக்குவரத்து சேவையாக மெட்ரோ லைட்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Metro Train
இதன் மூலம் மெட்ரோ ரயில் செல்லாத அனைத்து பாதைகளையும் மெட்ரோ ரயிலுடன் இணக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாகச் சென்னை வேளச்சேரி முதல் தாம்பரம் வரையில் 15.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மெட்ரோ லைட் பாதை அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ லைட் ரயில் திட்டம் ஏற்கனவே டெல்லி, கேரளாவின் கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.