Connect with us

இந்தியா

திருமணத்திற்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கிய மணமகள்.. சட்டென எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!

Published

on

பெங்களூரு என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது அந்த நகரில் உள்ள டிராபிக் பிரச்சனை தான். 10 கிலோமீட்டர் தூரத்தை அடைய வேண்டுமென்றால் கூட சில சமயம் ஒரு மணி நேர முதல் இரண்டு மணி நேரம் ஆகும் என்றும் அந்த அளவுக்கு நகரில் டிராபிக் பிரச்சனை தலைவிரி தாடி வருகிறது என்பது பெங்களூர் வாசிகளுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலையில் மணப்பெண் ஒருவர் காரில் திருமணத்திற்காக திருமண மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீர் என டிராபிக்கில் சிக்கினார். அந்த டிராபிக்கை கடந்து அவர் திருமண மண்டபத்திற்கு முகூர்த்த நேரத்திற்குள் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்ட நிலையில் திடீரென அவர் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெங்களூரை சேர்ந்த மணமகள் ஒருவர் தனது தோழிகள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருமண மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழக்கமாக ஏற்படும் டிராபிக் பிரச்சனை காரணமாக அவருடைய கார் சாலையில் ஊர்ந்து சென்றது. இந்த நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கி வருவதால் அவருடைய உறவினர்கள் பதட்டம் அடைந்தனர். சரியான நேரத்தில் திருமண மண்டபத்தை அடைய முடியுமா என்ற பதட்டத்தில் அவர்கள் இருந்த நிலையில் மணப்பெண் ஒரு புத்திசாலித்தனமான காரியத்தை செய்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன் வந்தவுடன் காரை நிறுத்த சொல்லி தன்னுடைய உறவினர்களுடன் காரில் இருந்து இறங்கி உடனடியாக மெட்ரோவில் அவர் பயணம் செய்ய முடிவு செய்தார். காரில் இருந்து இறங்கி அவர் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வீடியோவையும் அவர் தனது சமூகத்தில் பதிவு செய்தார்.

அவர் சென்ற மெட்ரோ ரயில் கிட்டத்தட்ட திருமண மண்டபத்தின் அருகில் சென்றதை எடுத்து அங்கிருந்து இறங்கி அவர் நடக்கும் தூரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு திருமணம் முகூர்த்த நேரத்துக்கு முன்பே சென்று விட்டார்.

இது குறித்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மணமகள் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு காரணமாக அவர் முகூர்த்த நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிகிறதூ. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மணமகளின் புத்திசாலித்தனமான முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?