சினிமா செய்திகள்
இப்ப சொல்லுங்க நான் பண்ணியது தப்பா? டுவிட்டரில் சிவகார்த்திகேயன் கேள்வி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் பிரேம்ஜி அமரனிடம் ’இப்ப சொல்லுங்க நான் சொன்னது தப்பா’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இன்று பல்வேறு பிரச்சினைகளை தாண்டி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநாடு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் காமாட்சி ஆகியோர்களுக்கு மாநாடு திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் இந்த திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வாழ்த்திய பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லையே என்று பிரேம்ஜி அமரன் கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டுக்கு பதில் அளித்து இருந்த சிவகார்த்திகேயன், ‘நீங்களும் வெங்கட்பிரபு அவர்களும் ஒன்றுதான் என்று நினைத்து உங்கள் பெயரை நான் சேர்க்கவில்லை. இப்போ சொல்லுங்க நான் பண்ணினது தப்பா என்று கேட்டுள்ளார்.
இருப்பினும் உங்கள் நடிப்பு மிகவும் சூப்பர், வாழ்த்துக்கள்! என்று சிவகார்த்திகேயன் அதில் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டுக்கள் தற்போது வைரலாகி வருகிறது.



















